அமெரிக்காவினால் இலங்கைக்கு அன்பளிப்பு செய்யப்பட்ட P 627 ஆழ்கடல் ஊடுருவல் கப்பல் சியெட்டெல் துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கான பயணத்தை ஆரம்பித்துள்ளது.
இந்தக் கப்பல், கடற்படையின் செயற்பாட்டுத் தேவைக்கேற்ப நவீனப்படுத்தப்பட்டதன் பின்னர் கொழும்பு துறைமுகத்தை நோக்கி நேற்று முன்தினம்(03) பயணத்தை ஆரம்பித்துள்ளதாக கடற்படை அறிவித்துள்ளது.
இந்த கப்பலானது எதிர்வரும் நவம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளது.