ஆசிய கிண்ண ரி20 கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.
பத்தும் நிசங்க மற்றும் குசல் மெண்டிஸ் ஆகியோர் அரைசதம் அடித்தனர், ஆனால் யுஸ்வேந்திர சாஹலின் பந்து வீச்சு போட்டியை இந்தியாவின் பக்கம் திரும்ப உதவியது. ஆனால் ராஜபக்ச மற்றும் ஷானக ஆகியோர் காரணமாக வெற்றி இலங்கைக்கு கிடைத்தது.
- போட்டியில் முதலில் துடுப்பாடிய இந்தியா 8 விக்கெட் இழப்புக்கு 173 ஓட்டங்களை எடுத்தது. ரோஹித் சர்மா 41 பந்துகளில் 72 ஓட்டங்களையும் சூர்யகுமார் யாதவ் 34 ஓட்டங்களையும் எடுத்தனர்
இலங்கை தரப்பில், தில்ஷான் மதுஷங்க (3/24), சமிக கருணாரத்ன (2/27), தசுன் ஷானக (2/26) ஆகியோர் முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினர்.