இந்தோனேஷியாவில் இன்றைய தினம் பதிவான நிலநடுக்கத்தில் 20 பேர் வரையில் உயிரிழந்ததாக முன்னதாக தெரிவிக்கப்பட்டிருந்த போதும், தற்போது அவ் எண்ணிக்கை 44 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அத்தோடு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தோனேஷியாவில் இன்றைய தினம் 5.6 ரிக்டர் அளவிலான பாரிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஜாவா தீவில் இந்தோனேஷியாவின் தலைநகர் ஜகார்த்தாவுக்கு அருகில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இதன்காரணமாக அங்கு மிகப்பெரும் சேதங்களும் உயிரிழப்புக்களும் பதிவாகியுள்ளன.
இது வரையில்,உயிரிழந்தவர்கள் தவிர 300இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் தெரியவருகிறது.
மேலும், நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியில் 4 மருத்துவமனைகள் காணப்படுவதாகவும், பதிவாகியுள்ள உயிரிழப்புகள் பெரும்பாலும் ஒரே இடத்திலேயே பதிவாகியுள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.