இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு ( TRCSL அனைத்து தொலைபேசி , நிலையான மற்றும் கட்டண தொலைக்காட்சி சேவை வழங்குநர்கள் முன்வைத்த கட்டண திருத்தத்தை அனுமதித்துள்ளது . இந்தக் கட்டண உயர்வு நாளைமறுதினம் திங்கட்கிழமை நடைமுறைக்கு வரும் என இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு தெரிவித்துள்ளது .
இதன் மூலம் தொலைபேசி , ஃபிக்ஸட் பிரோட்பாண்ட் மற்றும் பிற சேவைகளுக்கான கட்டணங்கள் 20 அதிகரிக்கப்பட்டுள்ளன . நேரத்தில் அனைத்து பே கட்டணங்களும் 25 % அதிகரிக்கப்பட்டுள்ளன . அமெரிக்க டொலரின் பெறுமதி தொடர்ந்து அதிகரித்து வருவதால் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு தெரிவித்துள்ளது .