இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியினர் இன்று இலங்கையை வந்தடைந்துள்ளனர்.
இந்த சுற்றுப்பயணத்தின் போது, இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே 3 ஒரு நாள் போட்டிகள் நடாத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் போட்டிகள் அனைத்தும் கண்டி பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இதன்படி எதிர்வரும் 25, 27 மற்றும் 30ஆம் திகதிகளில் இந்தப் போட்டிகள் நடைபெறவுள்ளன என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.