Friday 17 March 2023

இலங்கையில் மில்லியன் ரூபா எட்டு மாதங்களில் வீண்விரயம்

ஆகஸடு டனான 8 மாத காலப்பகுதிக்குள் 2900 மில்லியன் ரூபா பணம் அநியாயமாக வீணடிக்கப்பட்டுள்ளதாக பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது.

 

கடந்த காலங்களில் இலங்கைக்கு எரிபொருள் ஏற்றி வந்த கப்பல்களுக்கான கட்டணத்தைச் செலுத்துவதற்கு டொலர் பற்றாக்குறை காரணமாக கப்பல்கள் பல நாட்கள் கடலில் தரித்து நிற்க வேண்டி ஏற்பட்டிருந்தது.

சில கப்பல்கள் ஒரு மாதம் வரையான காலப்பகுதியில் தரித்து நின்றமையால் தாமதக் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது

இந்நிலையில், தற்போது அனைத்துக் கப்பல்களுக்கும் தாமதக் கட்டணம் செலுத்தி முடிக்கப்பட்டுள்ளதுடன், அதற்காக செலுத்தப்பட்ட மொத்த தாமதக் கட்டணம் 80 இலட்சம் அமெரிக்க டொலர்கள் எனவும், இந்த தொகை இலங்கை ரூபா மதிப்பில் 2900 மில்லியன் ரூபாவெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

தற்போது எரிபொருள் இறக்குமதிக்குத் தேவையான டொலர் கையிருப்பில் உள்ளமையினால் கடந்த ஒரு மாத காலப்பகுதிக்குள் கப்பல்களுக்கான தாமதக் கட்டணம் செலுத்தும் நிலை ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *