Friday 17 March 2023

உயிரைப் பறிக்கும் கேன் தண்ணீர்… உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை – water can

பெரும்பாலான மக்கள் வாங்கி பருகும் கேன் தண்ணீர் பல மடங்கு பாதிப்புகளை ஏற்படுத்துவதாக உலக சுகாதார அமைப்பு மற்றும் வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

எங்கும் தெரியும் கேன் வாட்டர் water can
இன்றைய கால கட்டத்தில் கேன் வாட்டர் வாங்குவோரின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. வெள்ளையாய் பளீரென்று தெளிந்த நீர் போல் இருக்கும் தண்ணீரைக் குடிப்பது தான் ஆரோக்கியம் என்று பலரும் நம்பிக் கொண்டிருக்கிறோம்.

ஆனால், உண்மையில் இது குடிப்பதற்கு நன்றாக இருந்தாலும் அதனால் உண்டாகும் பாதிப்பு பல மடங்கு என உலக சுகாதார அமைப்பு மற்றும் வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

இயற்கை நமக்கு தந்த தண்ணீரை குடிப்பதற்கு பதிலாக, கேன் வாட்டர், ஆர்.ஓ.வாட்டர், யூவி என பலவிதமான முறைகளில் நாம் தண்ணீரை பயன்படுத்தி வருகிறோம்.
பாதிப்பு என்ன?
குழாய் நீரில் காணப்படும் அசுத்தங்களை விட ஆர்ஓ நீரைக் குடிப்பது அதிகமான உடல் தீங்கை உண்டாக்கும் என அறிவியல் பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஆம், நம்முடைய வீடுகளிலும் தண்ணீரை சுத்திகரிக்க ஆர். ஓ. அடிப்படையிலான ஆஸ்மோசிஸ் (ஆர்ஓ) சுத்திகரிப்பு கருவி சிறந்ததாக பரிந்துரைக்கப்படுகிறது.
ஆனால், இதில் சுத்திகரிக்கப்படும் தண்ணீரில் உப்புச்சத்தும், கால்சியமும் இருக்காது. அதுமட்டுமின்றி, ஆர். ஓ. நீர் குடிப்பது கால்சியம், மெக்னீசியம் சத்துக்களை குறைப்பதுடன் உடல் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் நீரில் கரைந்துள்ள எலக்ட்ரோலைட்டுகளை அழிக்கிறது.

இதனால் உறுப்புகளுக்கு ஆற்றல் கிடைக்காமல் போகிறது. இதனால், சோர்வு, பலவீனம், தலைவலி, உயர் இரத்த அழுத்தம், இதய நோய், இரைப்பை புண்கள், கர்ப்ப சிக்கல்கள் மற்றும் மஞ்சள் காமாலை, இரத்த சோகை, எலும்பு முறிவுகள் மற்றும் கால்சியம் குறைபாடு ஆகிய பக்கவிளைவுகளை சந்திக்க நேரிடும் என்பது ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *