கொழும்பு madiwela kotte இல் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு எரிபொருள் நிரப்ப வந்த toyota fortuner கவனக்குறைவால் வாகனத்தை கட்டுப்படுத்த முடியாததால் அங்கு எரிபொருள் நிரப்பிக்கொண்டிருந்த முச்சக்கரவண்டியை மோதியதுடன் எரிபொருள் நிரப்பும் பம்பிகளையும் சேதப்படுத்தியுள்ளது. இச்சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
இதன்போது எரிபொருள் நிரப்பிக்கொண்டிருந்த ஒருவர் படுகாயமடைந்துள்ளார். அத்துடன் toyota fortuner சேதமடைந்து கண்ணாடி உடைந்ததுடன் அங்கிருந்த மோட்டார் சைக்கிள், முச்சக்கரவண்டி மற்றும் எரிபொருள் நிரப்பு நிலையத்தின் பம்பிகள் என்பன சேதமடைந்தன.https://youtu.be/sosYqF25V_M