போரில் உயிர் நீத்த மாவீரர்களை நினைவு கூர்ந்து அவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கான ஏற்பாடுகள் இன்றைய தினம் தமிழர் தாயக பிரதேசங்கள் எங்கும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், “இதற்கான அனுமதியை உங்கள் அரசு வழங்கியிருக்கின்றதா?” என்று ஜனாதிபதியிடம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
அதற்கு பதிலளித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பின்வருமாறு தெரிவித்துள்ளார்.
“ஒவ்வொருவரும் தமது உயிரிழந்த அன்புக்குரிய உறவுகளை அமைதியாக நினைவுகூருவதற்கு முழு உரிமை உள்ளது. அதனை யாரும் தட்டிப்பறிக்க முடியாது. இலங்கை ஜனநாயக நாடு.ஒவ்வொரு இனமும் இறந்த தமது உறவுகளை அமைதியாக நினைவேந்த முழு உரிமை உண்டு. இதைவிட வேறு எந்தக் கேள்வியும் தற்போதைய நிலைமையில் அவசியமற்றது” என தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நினைவேந்தல் ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படும் இடங்களில் படையினர் மற்றும் காவல் துறையை சேர்ந்தவர்களால் தமிழ் மக்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாகின்றமையும் குறிப்பிடத்தக்கது.