பல ஐரோப்பிய நாடுகளும், அண்மைக்காலமாக தமது நாடுகளில் புலம்பெயர் மக்கள் குடியேறுவதற்கான வாய்ப்புகளை வழங்கி வரும் நிலையில், கனடாவும் இது தொடர்பான ஒரு அறிவித்தலை தற்பொழுது வெளியிட்டிருக்கின்றது.
இதன்படி, வரக்கூடிய ஆண்டுகளில் சுமார் 1.5 மில்லியன் புலம்பெயர்ந்தோரை ஏற்றுக்கொள்வது கனடாவின் திட்டமென கூறப்படுகிறது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஆண்டொன்றிற்கு 500,000 புலம்பெயர்ந்தோரை கனடாவுக்கு வரவேற்பதாக கனடா பெடரல் அரசு அறிவித்திருந்தது.
அதனடிப்படையில்,கனடாவின் இத்தீர்மானம் குறித்த தகவல்கள் தற்பொழுது வெளியாகியுள்ளன.
அதாவது,கனடாவில் முதியவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. புதிதாக பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையோ அதற்கு இணையாக இல்லை.
ஆகவே, கனடா வளர்ச்சி அடைய வேண்டுமானால், அங்கு வேலை செய்ய ஆட்கள் தேவை இருப்பினும் கொரோனா தாக்கத்தின் பின்னர் ஒவ்வொரு துறைகளிலும் வேலையாட்களது எண்ணிக்கை பெருமளவில் குறைந்துள்ளது.இதனால், பொருளாதார ரீதியில் கனடாவின் வளர்ச்சிக்கு புலம்பெயர்ந்தோர் தேவை என்பது மறுக்கமுடியாத ஒன்றாகிவிட்டது.
ஆகவேதான், புலம்பெயர்ந்தோர் அதிக அளவில் வரவேற்கப்படுவதோடு அவர்கள் நிரந்தரக் குடியிருப்பு அனுமதி பெறுவதற்கான வாய்ப்புகளும் அதிகளவில் வழங்கப்படுகின்றது.