இலங்கையின் கிழக்கு மாகாணத்தில், தொடருந்து மோதியதில் குடும்ப பெண் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
திருகோணமலை – பூம்புகார் பகுதியில் வசிக்கும் நான்கு பிள்ளைகளின் தாயான மேரி சாந்தி என்ற 47 வயதுடைய பெண்ணே இச்சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
மேலும், கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்த தொடருந்து மோதியதிலேயே குறித்த பெண் உயிரிழந்துள்ளார் எனத்தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்த பெண்ணின் சடலம், தற்பொழுது திருகோணமலை பொதுவைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு, விபத்துக்கான காரணம் தொடர்பில் திருகோணமலை தலைமையக காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.