கொழும்பு – கண்டி பிரதான வீதி, கேகாலை – ரங்வல பகுதியில் மூன்று மோட்டார் சைக்கில்கள் மீது வேன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதன் போது பலத்த காயங்களுக்கு உள்ளான மோட்டார் சைக்கில்களை செலுத்தியவர்களை கேகாலை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த விபத்து சம்பவம் 09 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.
கண்டி நோக்கி சென்ற வேன் எதிர் திசையில் வந்த மூன்று மோட்டார் சைக்கில்கள் மீது மோதியுள்ளது. மோட்டார் சைக்கில்கள் மூன்றில் ஐவர் பயணித்துள்ளனர். பலத்த காயங்களுக்கு உள்ளான ஐவரையும் கேகாலை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மூவர் உயிரிழந்துள்ளனர். மேலும் இருவர் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது.
துல்ஹிரிய மற்றும் வேயங்கொடை பகுதியை சேர்ந்த 27 வயதுடையவர்களே விபத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். வேனின் சாரதியின் அதிக வேகம் மற்றும் கவன குறைவே விபத்துக்கு காரணம் என பொலிஸ் ஊடக பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சாரதியை கைது செய்துள்ள கேகாலை பொலிசார் மேலதி விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.