Friday 17 March 2023

கொழும்பில் இடம் பெற்ற வாகன விபத்தில் 24 வயதுடைய இளைஞன் பலி

கொழும்பு 7 இல் கறுவாத் தோட்டம் விஜயராம சந்தியில் நேற்று (06) இரவு இடம் பெற்ற வாகன விபத்தில் 24 வயதுடைய இளைஞன் உயிரிழந்துள்ளாரர்.

ரொஸ்மீட் பிளேஸில் இருந்து விஜேராம சந்தி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் மீது பின்னால் வந்த வாகனம் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதிக வேகம் காரணமாக மோட்டார் சைக்கிள் மீது வாகனம் மோதியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் கிராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சாரதி மது போதையில், கவனக்குறைவாக வாகனத்தை செலுத்தியமை மற்றும் வாகனத்தை செலுத்தும் போது கவனக்குறைவாக இருந்தமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்ததை ஏற்படுத்திய வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், கறுவாத்தோட்ட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *