கொழும்பு- வாழைத்தோட்டம் பகுதியில் சிலரினால் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளார்.
இந்தச் சம்பவம் 07 ஆம் திகதி புதன்கிழமை இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
வாழைத்தோட்டம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள செபாஸ்டியன் மாவத்தை பிரதேசத்தில் குறித்த சிலரினால் பெண் மற்றும் ஆண் கூரிய ஆயுதங்களால் தாக்கபட்டுள்ளார்கள்.
இதன் போது காயமடைந்த இருவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் குறித்த ஆண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் 43 வயதுடைய ஒருவர் எனவும் அவர் கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளார்கள்.
தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் சந்தேகநபர்கள் தப்பியோடி உள்ளதாகவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளார்கள்.
சம்பவம் தொடர்பில் வாழைத்தோட்டம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்கள்.