சீன தூதுவரின் கிழக்கு மாகாண விஜயம் குறித்து இலங்கைக்கான சீன தூதரகம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது
அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
இலங்கைக்கான சீன தூதுவர் குய் சென் ஹொங் தனது பாரியாருடன் ஐந்தாம் ஆறாம் திகதிகளில் கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் மேற்கொண்டார்.
மூன்று மாதங்களில் கிழக்கு மாகாணத்திற்கு சீன தூதுவர் மேற்கொண்ட இரண்டாவது விஜயம் இதுவாகும்.
ஐந்தாம் திகதி ஆளுநர் செயலகத்தில் தூதுவர் கிழக்கு மாகாண ஆளுநரை சந்தித்தார்.
வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவேண்டும் உறுதியான நடவடிக்கைகள் அவசியம் என வலியுறுத்திய தூதுவர் மூன்றுமாத காலத்திற்கு முந்தைய விஜயத்தின் பின்னர் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை அதிகாரிகளிற்கு தெளிவுபடுத்தினார்.
தூதரகத்தின் ஊக்குவிப்பு மற்றும் ஆளுநரின் இலங்கை துறைமுக அதிகார சபையின் அழைப்பு காரணமாக எதிர்கால ஒத்துழைப்பு குறித்து ஆராய்வதற்காக சீனநிறுவனங்கள் கிழக்கு துறைமுகத்திற்கு விஜயம் செய்ததாக தூதுவர் தெரிவித்தார்.
இந்த சந்திப்பின் பி;ன்னர் கிழக்கில் உள்ள 20 பாடசாலைகளின் அதிபர்களிடம் தொலைக்கல்விக்காக 22 ஸ்மார்ட்போர்ட்களை தூதுவர் வழங்கினார்.
சீனாவின் யுனான் மாகாண அரசாங்கத்தால் மே மாதம் கிழக்கு மாகாணத்தின் 10,000 ஏழைக் குடும்பங்களுக்கு உணவுப் பொதிகள் நன்கொடையின் தொடர்ச்சியாக இந்தத் திட்டம் நிதியளிக்கப்பட்டது. தூதுவர் மற்றும் ஆளுநர் யஹம்பத் கிழக்கு மாகாண பிரதம செயலாளர் திரு. துசித வணிகசிங்க மற்றும் இலங்கையின் யுன்னான் வர்த்தக அலுவலகத்தின் பணிப்பாளர் திரு. ஹு கை ஆகியோர் 70 சூரிய ஒளி விளக்கு அமைப்புகளை (13 மில்லியன் ரூபா பெறுமதியான) பாடசாலைகளுக்கு வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர். இது யுனான் மூலம்கிழக்கு மாகாணத்திற்கு வழங்கப்பட்டது.
6ஆம் திகதி காலை தூதுவர் மட்டக்களப்பில் உள்ள கிழக்குப் பல்கலைக்கழக சுகாதாரப் பாதுகாப்பு விஞ்ஞான பீடத்திற்குச் சென்று பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த 150 மாணவர்களுக்கு (முக்கியமாக பெண்கள்) புலமைப்பரிசில் (மொத்தம் 4.3 மில்லியன் ரூபா) கையளித்ததார். பல்கலைகழகத்தில் உள்ள அனைத்து சமூகங்களையும் சேர்ந்த வறிய மாணவர்களின் கல்வி மற்றும் நாளாந்த வாழ்க்கைக்கு ஏழு மாதங்கள் உதவும் நோக்கத்தை கொண்டது இது
பேராசிரியர் வல்லிபுரம் கனகசிங்கம் கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி கே.ஈ. கருணாகரன் துணைவேந்தர் பீடாதிபதிகள் ஆசிரியர்கள் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
சீனத் தூதுவர் தனது முக்கிய உரையில் இலங்கை இளைஞர்களுடன் கருத்துப்பரிமாற்றத்தில் ஈடுபட்டார்“கடந்த மூன்று மாதங்களில் இலங்கையிலும் உலகிலும் பல பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஆனால் சீனா-இலங்கை பாரம்பரிய நட்புறவின் ஒட்டுமொத்த நிலைமையும் பொதுவான வளர்ச்சியின் வேகமும் மாறாமல் இருப்பதைக் கண்டு நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். நமது இரு நாடுகளுக்கும் இரு நாட்டு மக்களுக்கும் இடையிலான பரஸ்பர புரிதல் பரஸ்பர மரியாதை மற்றும் பரஸ்பர ஆதரவு ஆகியவையும் மாறவில்லை. நமது இருதரப்பு நட்புறவு இரு நாட்டு மக்களின் இதயங்களில் ஆழமாக வேரூன்றியிருப்பதே இதற்கு முக்கிய காரணம்.என அவர் தெரிவித்தார்
“இளைஞர்கள் ஒரு நாட்டின் எதிர்காலம் மற்றும் இரு நாடுகளுக்கு இடையிலான நட்புறவின் எதிர்காலம். இந்த ஆண்டு சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 65 வது ஆண்டு நிறைவையும் ரப்பர்-அரிசி ஒப்பந்தத்தின் 70 வது ஆண்டு நிறைவையும் குறிக்கிறது. அனைத்து மாணவர்களும் கடினமாகப் படித்து வலுவாக வளரவும் இலங்கை மற்றும் சீன-இலங்கை நட்புறவின் புதிய முதுகெலும்பாக விரைவில் மாறவும் நான் மனதார வாழ்த்துகிறேன்.என அவர் தெரிவித்தார்
உள்நாட்டு மோதல்கள் இயற்கை அனர்த்தங்கள் கொவிட்-19 தொற்றுநோய் மற்றும் பாதிக்கப்பட்டுள்ள மட்டக்களப்பில் உள்ள தமிழ் மீனவ கிராமமான களுவன்கேணிக்கு விஜயம் செய்யுமாறு 6ஆம் திகதி பிற்பகல் சீனத் தூதரகத்தின் தூதுவர் குய் மற்றும் பிரதிநிதிகள் மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூகத்தினால் அழைக்கப்பட்டனர். தூதரகத்தின் நிதியுதவியுடன் கூடிய வீடமைப்புத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டிய பின்னர் சீனத் தூதுவர் விழாவில் கூடியிருந்த சுமார் 50 கிராம மக்கள் பிரதிநிதிகளிடம் பேசியதுடன் இலங்கைக்கான சீனத் தூதுவர் என்ற முறையில் நட்புறவு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது தனது கடமை என்று வலியுறுத்தினார். கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து இன மக்களுடனும். “தற்போதைய சிரமங்களில் இருந்து வெளிவருவதற்கு சீனா எப்பொழுதும் போல இலங்கைக்கு அனைத்து உதவிகளையும் வழங்கும்.” குய் கூறினார்.