மின்சாரம், கனிய எண்ணெய் உற்பத்தி, எரிபொருள் விநியோகம் மற்றும் சுகாதார சேவை என்பனவற்றை தொடர்ந்தும் அத்தியாவசிய சேவைகளாக அறிவித்து வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதியினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, மின்சாரம் வழங்கல் தொடர்பான சகல சேவைகளும் தொடர்ந்தும் அத்தியாவசிய சேவைகளாக கருதப்படும்.
அத்துடன், கனியவள உற்பத்திகள், எரிபொருள் வழங்கல் மற்றும் விநியோகம் என்பன அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வைத்தியசாலைகள், மருந்தகங்கள் மற்றும் அது சார்ந்த ஏனைய நிறுவனங்களின் நோயாளர் பராமரிப்பு பாதுகாப்பு பேசாக்கு ஊட்டல் சிகிச்சையளித்தல் என்பன தொடர்பில் தேவையான சகல சேவைகளும் அத்தியாவசிய சேவைகளாக கருத்த்படும் என குறித்த வர்த்மானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.