Friday 17 March 2023

சுப்பர் 4 சுற்று போட்டி இன்று ஆரம்பம் Cricket

15-வது ஆசிய கிண்ண போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் நடைபெற்று வருகின்றன.

இதில், இந்தியா, பாகிஸ்தான், ஹொங்கொங், இலங்கை, பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட 6 அணிகள் பங்கேற்றுள்ளன.

இந்த 6 அணிகளும் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு, ‘ஏ’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஹொங்கொங் அணிகளும், ‘பி’ பிரிவில் ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை அணிகளும் இடம் பெற்றுள்ளன.

இதில், ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியனான இந்தியா, ‘பி’ பிரிவில் ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் ஏற்கனவே சுப்பர் “4” சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டன.

இந்நிலையில், ‘ஏ’ பிரிவில் சூப்பர் “4” சுற்றுக்கு முன்னேறும் மற்றொரு அணி எது? என்பதை நிர்ணயிக்கும் கடைசி லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் – ஹொங்கொங் அணிகள்மோதிக்கொண்டன.
இந்த போட்டியில், ஆசிய கிண்ண 20 க்கு 20 தொடரில் ‘ஏ’ குழுவிலிருந்து சுப்பர் 4 சுற்றுக்கு பாகிஸ்தான் அணி தகுதி பெற்றுள்ளது.
ஹொங்கொங் அணியுடன் நேற்று இடம்பெற்ற போட்டியில் பாகிஸ்தான் அணி, 155 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

சார்ஜாவில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஹொங்கொங் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.
இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 193 ஓட்டங்களை பெற்றது.

பின்னர் 194 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய ஹொங்கொங் அணி 10.4 ஓவர்களில் 38 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து தோல்வி அடைந்தது.
இன்றைய தினம் சுப்பர் 4 சுற்று ஆரம்பிக்கவுள்ளது.

இந்தச் சுற்றின் முதலாவது போட்டியில் இலங்கை அணி, ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொள்ள உள்ளது.

சார்ஜாவில் இடம்பெறவுள்ள இந்தப் போட்டி இலங்கை நேரப்படி இரவு 7.30 க்கு ஆரம்பமாக உள்ளது.
முன்னதாக குழு நிலையில் இடம்பெற்ற போட்டியில், இலங்கை அணி, ஆப்கானிஸ்தான் அணியிடம் தோல்வி கண்டிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *