ஐக்கிய தேசியக் கட்சியின் 76 ஆவது ஆண்டு நிறைவு விழா இன்று(06) சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ளது.
“ஒன்றாய் எழுவோம்” எனும் தொனிப்பொருளில் இன்றைய நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
இதற்கான நிகழ்வுகள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று(06) மாலை 3.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.