வவுனியாவில் பட்டக்காடு பகுதியில், 16 வயதுடைய தனது தங்கையை பாலியல் வன்புணர்வு செய்த 26 வயதுடைய இளைஞனை நெளுக்குளம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தந்தை இன்றி தாயின் அரவணைப்பில் சகோதரன், தங்கை இருவரும் வசித்து வந்த நிலையில் தனிமையில் இருந்த தங்கையை சகோதரன் பாலியல் வன்புணர்வு செய்துள்ளதாக தெரிவந்துள்ளது.
இதன் அடிப்படையில், நெளுக்குளம் பொலிஸ் நிலையத்திற்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டையடுத்து வன்புணர்விற்கு உள்ளாக்கப்பட்ட சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிப்பட்டடுள்ளார்.
மேலும், குறித்த சிறுமியை வன்புணர்விற்கு உட்படுத்திய சகோதரனை காவல்துறையினர் கைது செய்துள்ளதோடு மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.