வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு ஏற்பாட்டில் தமிழ் மக்களுக்கான கௌரவமான அரசியல் உரிமை கோரி 100 நாள் விழிப்புணர்வு திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வடக்கு கிழக்கு மாகாணங்களிலும் மாவட்டங்கள் கிராமங்கள் தோறும் மக்களின் உரிமைகள் தேவைகள் தொடர்பில் தெளிவுபடுத்தப்பட்டு கவனயீர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.
அந்த வகையில் 08 ஆம் திகதி வியாழக்கிழமை 39ஆவது நாளாக குருநகரில் இந் நிகழ்வு இடம்பெற்றது.
வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு சார்பில் சட்டதரணி அம்பிகா சிறீதரன் நிகழ்வின் நோக்கம் பற்றி அறிவுறுத்தினார்.
தொடர்ந்து அப்பகுதி மக்களால் தமிழ் மக்களுக்கான கெளரவமான உரிமை வேண்டும் என கேரி கவனயிர்ப்பில் ஈடுபட்டனர்.
இதேவேளை குறித்த நிகழ்வானது வலிகாமம் கிழக்கு புத்தூர் பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் அங்கு அங்கு சென்ற இனந்தெரியாத நபர்கள் இந்த நிகழ்வு இங்கு நடாத்துவதற்கு அனுமதியில்லை எனவும் அதையும் மீறி நடந்தால் விசாரணைக்கு உட்படுத்வீர்கள் என அச்சுறுத்தப்பட்டுள்ளார்கள் இதனால் தமது பகுதியில் விழிப்புணர்வு மேற்கொள்ள முடியவில்லை என புத்தூர் பகுதி மக்கள் தெரிவித்தார்கள்.