பிரிட்டிஸ் மகராணியின் மரணத்தை தொடர்ந்து இளவரசர் சார்ல்ஸ் முடிக்குரிய மன்னராகியுள்ளார்.
தாயாரின் உடல்நிலை பாதிக்கப்பட்டவேளை அவருடன் இருந்த இளவரசர் சார்ல்ஸ் தனது அன்னையின் இழப்பு தனதுவாழ்வில் பாரிய மாற்றத்தை கொண்டுவரும் தான் மன்னராகவேண்டியநிலை வரும் என தெரிவித்திருந்தார்.
அதன்பின்னர் வியாழக்கிழமை பக்கிங்காம் அரண்மணை பிரிட்டிஸ் மகாராணியின் மரணத்தை அறிவித்தது.
தற்போது மன்னராகியுள்ள சார்ல்ஸ்ஏழு தசாப்தங்களாக அரியாசனத்தின் அடுத்த வாரிசாக காணப்பட்டார்.அவரோ அவரது தேசமோ இது குறித்து பகிரங்கமாக ஒருபோதும் கதைக்கவிரும்பியதில்லை.
பிரிட்டிஸ் மகாராணியின் உயிரிழப்பு என்பது மிகப்பெரும் தனிப்பட்ட துயரமாக பிரிட்டனில் கருதப்பட்டது.
சார்ல்ஸ் ஒருபோதும் தனது தாயின் அரியாசனத்தில் அமர்வது குறித்து சிந்திக்கவில்லை ஏனெ;றால் அது அவரின் தாயின் மரணத்தை குறி;க்கின்றது என முன்னாள் உதவியாளர் வியாழக்கிழமை தெரிவித்தார்.எனினும் தற்போது மகாராணியின் மறைவை தொடர்ந்து 1952 ம் ஆண்டு தனது தாய் அரியாசனம் அமர்ந்தவேளை வேளை மூன்று வயது முதல் சார்லஸின் வாழ்க்கையை வரையறுத்த முடிவுக்குரியவர் என்ற விடயம் தற்போது நிஜமாகியுள்ளது.
சார்ல்ஸின் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத புதிய குறுகிய அத்தியாயம் ஆரம்பமாகவுள்ளது.
ஐக்கியஇராச்சியம் முதல் கனடா அவுஸ்திரேலியா என 14 பொதுநலவாய நாடுகளின் மன்னராவது தசாப்தகாலமாக அவரை பின்தொடர்ந்த கேள்விக்கு பதிலளிப்பதற்கான வாய்ப்பை வழங்கும். வாழ்நாள் முழுவதும் வெளிப்படையாக பேசும் தலையீடுகளிற்கு பின்னர் அவர் எப்படிப்பட்ட மன்னராக விளங்குவார் என்பதே அந்த கேள்வி
எதிர்வரும் நாட்களில் அவர் தனிப்பட்ட துயரத்தின் இரட்டை சவால்களை எதிர்கொள்வார் துயரமான தருணத்தில் தேசத்தை வழிநடத்துவார்.
அவர் குடும்பத்தின் மீதும் தன்மீதும் கவனம் செலுத்துவார் ஆனால் அரண்மணைகளை பொறுத்தவரை துயரமான தருணத்தில் தேசத்திற்கு பொருத்தமான விடயங்களை தெரிவி;ப்பதும் செய்வதும் முக்கிய விடயமாக விளங்கும் இதனை புதிய ஆட்சியின் ஆரம்ப நாட்களை உருவாக்குவதும் பிரதானமாக அமையும் என முன்னாள் சகா ஒருவர் தெரிவித்தார்.