Saturday 18 March 2023

தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிட ஜனாதிபதி உத்தரவு

பிரித்தானிய மகாராணியான 2 ஆம் எலிசசெபத் மறைவுக்கு இரங்கல் செலுத்தும் வகையில் இன்று (09) முதல் அனைத்து பொதுக் கட்டடங்களிலும் தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு பொதுநிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

பிரித்தானிய மகாராணியான 2 ஆம் எலிஸசெபத் அவரது 96 ஆவது வயதில் நேற்று காலமானார்.

தேசிய துக்க தினம் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராணி இரண்டாம் எலிசபெத் 1952 முதல் 1972 வரை இலங்கையின் கடைசி ராணியாக பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *