காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட எஜமானைத் தேடி காவல் நிலையம் அருகே காத்திருந்த நாயால் கைதி ஒருவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் களுத்துறை புளத்சிங்கள பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.
போலீஸ் சிறை அருகே நாய் ஒன்று நிற்பதை பார்த்த போலீசார் அதை விரட்டினர். ஆனால், நாய் வெளியே வராமல் காவல்நிலையத்தில் பதுங்கிக்கொண்டது.
இதனைக் கண்ட பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட போது, அது சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபர் வளர்த்து வந்த நாய் எனத் தெரியவந்துள்ளது.
மேலும், சந்தேகநபர் புளத்சிங்கள பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதுடன், அந்த நாய் ஜீப்பின் பின்னால் நீண்ட தூரம் ஓடி வந்துள்ளமையும் தெரியவந்துள்ளது. பின்னர், இரும்பு கம்பிகள் வழியாக நாய் அதன் உரிமையாளரைப் பார்த்துக் கொண்டிருந்ததை போலீசார் கவனித்துள்ளனர்.
இதனையடுத்து சந்தேக நபரை பொலிஸார் பிணையில் விடுவித்துள்ளதாக தெரியவந்துள்ளது.