Friday 17 March 2023

படுகொலை செய்யப்பட்ட மாணவி கிருஷாந்திக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி பாராளுமன்றில் அஞ்சலி

இராணுவத்தினரால் யாழ் செம்மணியில் வைத்து பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட மாணவியான கிருஷாந்திக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி சபையில் அஞ்சலி செலுத்தியது.

பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற பிள்ளைகள் தாய்மாரின் மந்தபோசணை தொடர்பாக யுனிசெப் நிறுவனம் விடுத்திருக்கும் அறிக்கை மீதான சபை ஒத்திவைப்பு வேளை இரண்டாவது நாள் விவாதத்தில் உரையாற்றிய தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தனது அஞ்சலியை செலுத்தினார்.

யாழ்.செம்மணியில் இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட மாணவி கிருஷாந்தி குமாரசுவாமியின் 26 ஆவது நினைவுதினம் நேற்று புதன்கிழமை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அனுஷ்டிக்கப்பட்டது.

1996 ஆம் ஆண்டு யாழ். சுண்டிக்குளி கல்லூரி மாணவி கிருஷாந்தி செம்மணி பகுதியில் வைத்து இராணுவத்தினரால் பாலியல்
வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்நிலையிலேயே அவரையும் அவரை தேடிச்சென்ற நிலையில் படுகொலை செய்யப்பட்ட மாணவியின் உறவினர்களையும் நினைவு கூர்ந்து சபையில் தனது அஞ்சலியை கஜேந்திரன் எம்.பி. செலுத்தினார்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *