பதிவாளர் நாயகத்தினால் விநியோகிக்கப்படும் பிறப்பு, மரண மற்றும் திருமண பதிவு சான்றிதழ்கள் உள்ளிட்ட சட்ட ஆவணங்களுக்கு செல்லுபடிக்காலம் வரையறுக்கப்படவில்லை என தலைமை பதிவாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பதிவாளர் நாயகத்தினால் விநியோகிக்கப்பட்ட சில சான்றுப்பத்திரங்களின் பிரதிகள் 6 மாதங்களுக்கு மாத்திரமே செல்லுபடியாகும் எனவும் அவற்றின் பிரதிகளை எடுத்து வருமாறும் சில அரச நிறுவனங்கள் பொதுமக்களுக்கு அறிவுறுத்துவதாக திணைக்களத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.