அரசாங்க நிதி பற்றிய குழுவின் நடவடிக்கைகள் தொடர்பான பொதுமக்களின் கேள்விகளை நேரடியாக கேட்பதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் ஹர்ஷ டி சில்வா பொதுமக்கள் கேள்விகளுக்கு டுவிட்டர் ஸ்பேஸ் ஊடாக பதிலளிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா கலந்துக்கொள்ளும் நேரடி கலந்துரையாடல் நாளை (02) முற்பகல் 10.30 மணி முதல் 11.30 மணி வரை நாடாளுமன்ற உத்தியோகபூர்வ டுவிட்டர் கணக்கின் (@ParliamentLK – https://twitter.com/ParliamentLK) ஊடாக நடைபெறவுள்ளது.
அரசாங்க நிதி பற்றிய குழுவின் நடவடிக்கைகள் தொடர்பான பொதுமக்களின் கேள்விகளை #LKaskMP ஊடாக முன்வைக்க முடியும் என்பதுடன், அன்றைய தினம் நேரடியாக இணைந்து கொண்டு கேள்விகளை முன்வைக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் மைய நாடாளுமன்றத்திற்காக மக்கள் பிரதிநிதிகளையும் பொதுமக்களையும் நேரடியாக தொடர்புபடுத்தும் வகையில் நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் இந்த நேரடி டுவிட்டர் கலந்துரையாடல் தொடரை ஏற்பாடு செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.