மகாலட்சுமி திருமணம் செய்து கொணட நிலையில் தங்களது திருமணத்தை குறித்த பல நிகழ்வுகளை கூறியுள்ளனர்.
மக்களால் ஃபேட் மேன் என்று அழைக்கப்படும் தயாரிப்பாளர் ரவீந்தர் கடந்த சில தினங்களுக்கு முன்பு, பிரபல விஜே மற்றும் நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்து கொண்டார்.
திருப்பதி கோவிலில் வைத்து நடைபெற்ற இவர்களின் திருமணத்திற்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.
தங்களது திருமண புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு கருத்துக்களையும் பரிமாறிக் கொள்கின்றனர் குறித்த தம்பதிகள்.
தங்களின் திருமணம் பற்றி பேசிய ரவீந்தர், “கடந்த சில தினங்களாகவே எங்களின் திருமணம் பற்றி தான் நிறைய பேர் பேசிக் கொண்டே இருக்கிறார்கள்.
அதிலும் குறிப்பாக, பலரும் மகாலட்சுமி தான் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டதாக பேசி கொள்கிறார்கள்.
ஆனால், எனக்கே இது இரண்டாவது திருமணம் தான். பல பேருக்கு எனக்கு திருமணம் ஆன விஷயமே தெரியாது.
“நான் அவரிடம், நிறைய நேரம் எடுத்துக் கொண்டு யோசித்து சொல்லுங்கள். நான் உடம்பை குறைத்துக்க கொண்டு வந்து உங்களை திருமணம் செய்கிறேன் என கூறினேன்.
ஆனால், மகாலட்சுமியோ அது நடக்காது என கூறி விட்டார். இப்படி இருப்பதே அவருக்கு விருப்பமாக தான் இருந்தது” என்றார்.
மகாலட்சுமி கூறுகையில், தனக்கும் தனது மகனுக்கும் பாதுகாப்பாக இந்த வாழ்க்கை இருக்கும் என்று நினைத்தே திருமணம் செய்துள்ளதாக கூறினார.
மகாலட்சுமி தனது மகன் என்று கூறியதும் ரவீந்தர் இடையே குறுக்கிட்டு எங்கள் மகன் என்று கூறி மகாலட்சுமியை வாயடைக்க வைத்துள்ளார்.