Friday 17 March 2023

யாழில் நீரேரியில் தவறி விழுந்த இளைஞன் ; தொடரும் தேடுதல் நடவடிக்கை

யாழ்ப்பாணம் அச்சுவேலி காவல்துறைப்பிரிவுக்குட்பட்ட வல்லைப் பாலத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இளைஞரொருவர் நீரேரியில் தவறி விழுந்து காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனைத் தொடர்ந்து அவரை தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

புத்தூர் கலைமதி கிராமத்தை சேர்ந்த பாஸ்கரன் லக்ஸன் எனும் 19 வயதுடைய இளைஞனே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த இளைஞரும் அவரது நண்பர்கள் சிலரும் இணைந்து வல்லை பாலத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை வேளையில் தூண்டில் போட்டு மீன் பிடியில் ஈடுபட்டுள்ளனர். அதன் போதே இளைஞன் பாலத்தில் இருந்து நீரேரிக்குள் தவறி விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நிலையில் இளைஞரைத் தேடும் பணியில் அச்சுவேலிகாவல்துறையினரும் பொதுமக்களும் இணைந்து ஈடுபட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *