தென்மேற்கு மேற்கு மத்திய வங்காள விரிகுடாவின் மையப்பகுதியில் காணப்படுகின்ற காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து வட அகலாங்கு 10.0N இற்கும் கிழக்கு நெடுங்கோடு 85.5E இற்கும் இடையில் யாழ்ப்பாணத்திற்கு வடகிழக்கே 410 கிலோமீட்டர் தூரத்தில் மையம் கொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு நிலை மேற்கு வடமேற்கு திசையில் தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழகத்தை நோக்கி நகரக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக 12 மணி நேரத்தில் புதுச்சேரி கடலோரப் பகுதிகள் படிப்படியாக வலுவிழக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஊவா மாகாணம் மற்றும் அம்பாறை மாவட்டத்தின் சில இடங்களில் மழையோடு கூடிய வானிலை நிலவுவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டின் பிற பகுதிகளில் பெரும்பாலும் சீரான வானிலை நிலவும் எனவும் கூறப்பட்டுள்ளது.