முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதை தொடர்ந்து, தற்போது மற்றய 6 பேரையும் விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
இதன் படி,சிறையில் இருந்த நளினி, முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் உள்ளிட்ட 6 பேரையும் விடுதலை செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
30ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் இவர்களின் சட்ட போராட்டம் தற்போது முடிவுக்கு வந்துள்ளமை பலருக்கும் மகிழ்ச்சியளித்திருக்கின்றது.
30 வருட கால சிறைவாசம், தண்டனை காலத்தில் நன்னடத்தை செயற்பாடுகள் போன்றவற்றை அடிப்படையாக வைத்து, தமக்கான சிறப்பு அதிகாரம் வழங்கும் அரசியல் சாசனத்தின் 142- வது பிரிவின் கீழ் உச்ச நீதிமன்றம் பேரறிவாளனை விடுதலை செய்தது.அதே அதிகாரத்தை கொண்டு தற்போது இவர்களுக்கான விடுதலை வழங்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.