கனடா – மிசிசாகாவில் வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மிசிசாகாவைச் சேர்ந்த 30 வயதான தாமிரன் அமிர்தகணேசன் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பீல் பிராந்திய பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த 23ம் திகதி அன்று மதியம் 2 மணியளவில் Derry Road West and McLaughlin Road பகுதியில் உள்ள ஒரு வங்கியில் கொள்ளை நடந்ததாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
பொலிஸாரின் கூற்றுப்படி, சந்தேக நபர் வங்கியை விட்டு வெளியேறி கால் நடையாக தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விரிவான குற்றவியல் விசாரணை மற்றும் ஆதாரங்கள் கண்டுபிடிப்பு உட்பட, மத்திய கொள்ளைப் பணியகத்தின் புலனாய்வாளர்கள் சந்தேக நபரை மறு நாள் அடையாளம் கண்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
சந்தேக நபர் ஒரு மோட்டலில் இருந்ததாகவும், சாம்பல் நிற வாகனத்தை ஓட்டிச் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாறுவேடமிட்டு கொள்ளையடித்ததாக சந்தேகநபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.