புத்தூரை சேர்ந்த இளைஞன் ஒருவன், வல்லை கடல் நீரேரிக்குள் மூழ்கி நேற்றைய தினம் காணாமல் போயிருந்த நிலையில், அவரை தேடும் பணிகள் நேற்று மாலை பொழுதிலிருந்து முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், குறித்த இளைஞன் இன்று(23) காலை 7.25 மணியளவில், கடல் படையினரால் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞரும் அவரது நண்பர்கள் சிலரும் இணைந்து வல்லை பாலத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை வேளையில் தூண்டில் போட்டு மீன் பிடியில் ஈடுபட்டுள்ளனர். அதன் போதே இளைஞன் பாலத்தில் இருந்து நீரேரிக்குள் தவறி விழுந்ததாக தெரிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, குறித்த ஏரியில் அவரை தேடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்த நிலையிலேயே இன்று அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.