புதிய இடைக்கால வரவுசெலவு திட்ட முன்மொழிவின்படி, எதிர்வரும் டிசம்பர் 31ஆம் திகதிக்குள் 60 வயதை பூர்த்தி செய்த அரச ஊழியர்கள் ஓய்வு பெற வேண்டும். இதன்படி பார்த்தால் எதிர்வரும் டிசம்பர் மாதம் 31ஆம் திகதி ஓய்வு பெறும் அரச ஊழியர்களின் எண்ணிக்கை 20,000ஐ தாண்டும்.
இது தொடர்பான சுற்றுநிரூபம் எதிர்வரும் இரண்டு வாரங்களில் வெளியிடப்படும். எவ்வாறாயினும், 60 வருட வரம்பு பல அத்தியாவசிய தொழில்களைச் சேர்ந்த அரச ஊழியர்களை பாதிக்காது.
இது தொடர்பான திருத்தங்கள் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளன. பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில், அரச சேவையை முடிந்தவரை மட்டுப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அத்துடன், அதற்கேற்ப ஓய்வு பெறும் வயதைக் குறைக்கவும் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது