Friday 17 March 2023

அரச வேலை பெற்றுத் தருவதாக் கூறி, பெண்ணொருவரிடம் பாலியல் லஞ்சம் ,   50 ஆயிரம் ரூபாய் பணம்  லஞ்சமாக கோரிய இருவரை எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, கொழும்பு பிரதான நீதவான் ஹர்ஷண கெகுணவெல, இன்று (07) உத்தரவிட்டார்.

அரசியற் கட்சியொன்றின் யாழ். மாவட்ட அமைப்பாளர் உள்ளிட்ட இருவர், இலஞ்சம் மற்றும்

அரச வேலை பெற்றுத் தருவதாக் கூறி, பெண்ணொருவரிடம் தகாத உறவுக்கு அழைத்ததுடன், 50 ஆயிரம் ரூபாய் பணம் லஞ்சமாக கோரிய இருவரை எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, கொழும்பு பிரதான நீதவான் ஹர்ஷண கெகுணவெல, இன்று (07) உத்தரவிட்டார்.

அரசியற் கட்சியொன்றின் யாழ். மாவட்ட அமைப்பாளர் உள்ளிட்ட இருவர், இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது..

 

அத்துடன் பெண்ணிடம் புறக்கோட்டையிலுள்ள உணவகம் ஒன்றில் வைத்து பணத்தைப் பெற முயன்றபோது, சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டதாக ஆணைக்குழு மன்றுக்கு அறிவித்தது. இந்நில நிலையிலேயே சந்தேக நபர்களுக்கு மேற்படி உத்தரவை நீதிமன்றம் வழங்கியுள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *