- Advertisement -

3000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த எகிப்திய மன்னரின் ‘மம்மி’ டிஜிட்டல் முறையில் ஆய்வு

0 54

பண்டைய எகிப்து பாரோ மன்னர் ஒருவரின் மம்மி உடல் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் அவிழ்க்கப்பட்டு முதல் முறை ஆராயப்பட்டுள்ளது.

கி.மு. 1525 தொடக்கம் கி.மு. 1504 வரை ஆட்சி புரிந்த முதலாம் அமென்ஹோடெப்பின் மம்மி 140 ஆண்டுகளுக்கு முன் டெயிலர் எல் பஹாயிரியில் கண்டுபிடிக்கப்பட்டது.

எனினும் அந்த மம்மியை பாதுகாக்கும் வகையில் அதன் நேர்த்தியான முகக்கவசம் மற்றும் கட்டுகளை அகற்றுவதை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தவிர்த்து வந்தனர்.

இந்நிலையில் சீ.டீ ஸ்கேன் முறைமூலம் இந்த பாரோ மற்றும் அவரது அடக்கஸ்தலம் பற்றி முன்னர் அறியப்படாத விபரங்கள் தெரியவந்துள்ளன.

“3000 ஆண்டுகளுக்கு முன்னர் மூடப்பட்ட மன்னரின் முகத்தை எம்மால் பார்க்க முடிந்தது” என்று இந்த ஆய்வில் இடம்பெற்ற கதிரியக்கவியல் பேராசிரியரான டொக்டர் சஹர் சலீம் குறிப்பிட்டுள்ளார்.

முதலாம் அமென்ஹோடெப் சுமார் 169 மீற்றர் உயரம் கொண்டவர் என்றும் தனது 35 வயதளவில் அவர் உயிரிழந்திருப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் முடிவுக்கு வந்துள்ளனர்.

சுருண்ட முடி, சிறிய குறுகிய மூக்கு மற்றும் குறுகிய கன்னத்தை கொண்டவராக மன்னர் இருந்துள்ளார்.

மன்னரின் உடலில் சுமார் 30 தாயத்துக்கள் மற்றும் ஒரு வித்தியாசமான தங்கக் கச்சையும் இருந்தது தெரியவந்துள்ளது.

முதற்கட்ட ஆய்வில் முதலாம் அமென்ஹோடெப் எப்படி மரணமடைந்தார் என்பதற்கான காரணம் தெரியவில்லை. ‘பிரான்டியர்ஸ் இன் மெடிசின் இதழில், இந்த ஆய்வு தொடர்பான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.