மர்ம நபர்களால் துப்பாக்கி சூடு! குழந்தை உட்பட 8 பேர் பலி
மெக்சிகோ, குவானா ஜூவாடோ மாகாணத்தில் சிலாவ் நகரில் மர்ம நபர்கள் இருவரினால் மேற்கொள்ளப்பட்ட திடீர் துப்பாக்கி தாக்குதலில் குழந்தை உட்பட 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த மர்ம நபர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் வந்து அங்குள்ள வீடுகளுக்குள் புகுந்து திடீர் துப்பாக்கி தாக்குதலை நடத்தி விட்டு சம்பவ இடத்தினை விட்டு தப்பி ஓடியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த திடீர் தாக்குதலில் ஒரு வயது குழந்தை மற்றும் 16 வயது சிறுமி உட்பட 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் துப்பாக்கி சூடு குறித்து விசாரணைகளை மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.