- Advertisement -

நியுயோர்க் நகரில் 9 குழந்தைகள் உட்பட 19 பேர் உடல் கருகி உயிரிழப்பு

0 45

அமெரிக்காவின் நியூயோர்க் நகரின் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 சிறுவர்கள் உட்பட 19 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நியூயோர்க் நகரின் பிராங்க்ஸ் பரோவில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் மேலும் பலர் ஆபத்தான நிலையில் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இது அமெரிக்க வரலாற்றில் மிக மோசமான தீ விபத்துகளில் ஒன்றாக இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் ஐந்து மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர் என்றும் பலர் மாரடைப்பு மற்றும் மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.