- Advertisement -

சாவகச்சேரியில் வீடு புகுந்த வன்முறை கும்பல்: அடித்து நொருக்கப்பட்ட சி.சி.ரி.வி கமராக்கள்

0 8

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்த வன்முறை குழுவினர் சி.சி.ரி.வி கமராக்களை உடைத்துச் சேதமாக்கியுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

சாவகச்சேரியில் ஜே/300 பகுதியில் அமைந்துள்ள வீடொன்றின் பின்புறமாகப் பொருத்தப்பட்ட பாதுகாப்பு கமராக்கள் உடைக்கப்பட்டுள்ளது.

குறித்த வீட்டில் திருடும் நோக்கில் பாதுகாப்பு கமராக்கள் உடைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சாவகச்சேரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.