- Advertisement -

நாட்டில் ஏற்பட்ட எரிவாயு தட்டுப்பாடு: லிட்ரோ நிறுவனம் இன்று விடுத்துள்ள அறிவிப்பு

0 5

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிவாயு சிலிண்டர்களுக்கான தட்டுப்பாடடை நிவர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும், நாடளாவிய ரீதியில் தற்போது விநியோகத்திற்குத் தேவையான எரிவாயு சிலிண்டர்கள் உள்ளன எனவும்  லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

எனவே மக்கள் நீண்ட வரிசையில் எரிவாயுவுக்காக காத்திருக்கத் தேவையில்லை எனவும் சிறிய வர்த்தக நிலையங்களுக்கும் அடுத்த வாரத்திலிருந்து தட்டுப்பாடின்றி எரிவாயு விநியோகிக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.

கடந்த காலங்களில் நாளாந்த எரிவாயு சிலிண்டர்களுக்கான கேள்வி சுமார் இரண்டு லட்சமாகக் காணப்பட்டது. எனினும், தற்போது அந்த எண்ணிக்கை 90 ஆயிரமாகக் குறைந்துள்ளது.

இதன்படி, நிறுவனம் தற்போது நாளாந்தம் 90 ஆயிரம் எரிவாயு உருளைகளைச் சந்தைக்கு விநியோகிக்கின்றது.

Leave A Reply

Your email address will not be published.