பொதுமக்களுக்கு விமானச்சேவைகளின் தலைவர் விடுத்துள்ள அறிவிப்பு
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பிரமுகர்களுடன் பயணிக்கும் சாதாரண மக்கள் இனி, பிரமுகர் முனையத்திலிருந்து பயணிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என விமான நிலையங்கள் மற்றும் விமானச் சேவைகளின் தலைவர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி அறிவித்துள்ளார்.
அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
இனிவரும் காலங்களில் விசேட வரப்பிரசாதம் பெற்ற உயரதிகாரிகள் மாத்திரமே குறித்த முனையத்தின் வழியாகப் பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள்.
அவர்களுடன் பயணம் செய்யும் நண்பர்கள் உட்படச் சாதாரண மக்கள் முனையத்தின் வழியாகச் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
விமானம் நிறுத்துமிடத்திற்குச் சென்று விசேட விருந்தினர்கள் யாரையாவது வரவேற்க வேண்டுமானால், விமான நிலையத் தலைவர், துணைத் தலைவர் அல்லது மேலாளரிடம் அனுமதி பெற வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.