- Advertisement -

யாழை சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரன் “மாதகல் மதன்” கைது

0 9

இந்தியாவிலிருந்து கடல் மார்க்கமாக யாழ்ப்பாணத்திற்குப் போதைப்பொருள் கடத்தும் வலையமைப்பின் பிரதான சூத்திரதாரி எனக் குற்றஞ்சாட்டப்படும் ஒருவர் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளார் என்று தமிழக ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

யாழ்ப்பாணம் மாதகல் பகுதியைச் சேர்ந்த ‘மாதகல் மதன்’ என்ற புனை பெயருடைய 44 வயதான நபரே வேதாரணியம் – செம்போடை பகுதியில் வைத்து நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளார். 

போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் யாழ் பாதுகாப்பு துரையின் கண்காணிப்பு மற்றும் தேடுதலிலிருந்த குறித்த நபர் இந்தியாவில் கைது செய்யப்பட்டிருக்கின்றார். 

2021 அக்டோர் நடுப்பகுதியில் யாழ்ப்பாணத்திற்குக் கஞ்சா கடத்திய விவகாரத்தில் இவர் தமிழகத்தில் தேடபட்டுவந்தார். தமிழக பொலிஸாருக்கு போக்குகாட்டி 2 மாதங்கள் தலைமறைவாக இருந்த நிலையல் நேற்று முன்தினம் கைதானார். 

கைதான குறித்த நபர் தற்போது சைதாப்பேட்டை உப சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக இந்தியச் செய்திகள் கூறுகின்றன. 

Leave A Reply

Your email address will not be published.