சாவகச்சோியில் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்ட மாணவர்கள் கைது
யாழ்.சாவகச்சோியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் மாணவர்கள் சிலர் குழுவாக வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்ட மூன்று மாணவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.
குறித்த வழக்கு சாவகச்சேரி நீதவான் யூட்சன் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டபோது சந்தேக நபர்களான மூன்று மாணவர்களும் நீதவானால் கடுமையாக எச்சரிக்கப்பட்டனர்.
பாடசாலை நாட்களில் கல்வியில் கவனம் செலுத்தும் படியும் குற்றச்செயல்களில் ஈடுபடுவதை உடனடியாக நிறுத்தும்படியும் மேலும் குற்றச்செயலில் ஈடுபட்டால் நீதிமன்ற தண்டனைகளைப் பெறவேண்டிவரும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் பெற்றோர் முன்னிலையில் அறிவுரைகளையும் கூறியிருந்ததுடன், மூவரையும் தலா 75000 பெறுமதியான ஆள்பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த வழக்கை எதிர்வரும் மார்ச் மாதம் 30ம் திகதிக்கு ஒத்திவைத்துத் தீர்ப்பளித்துள்ளார்.