பிரித்தானியாவில் கொரோனா நிலைமை இருமடங்கு மோசமாகலாம்: எச்சரிக்கும் பிரதமர்
#BorisJohnson#CoronaVirus #Curfew
கோவிட்-19 வைரஸ் முதல் அலையைவிட இருமடங்கு நிலைமை மோசமாகலாம், இறப்பும் அதிகரிக்கலாம் என பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார்.
பிரித்தானியாவில் கோவிட்-19 பெருந்தொற்றை கட்டுக்குள் கொண்டுவர நான்கு வாரகால முழு முடக்கத்தை தவிர மாற்று வழிகள் இல்லை என சுட்டிக்காட்டி, பாராளுமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்க இருக்கிறார் பிரதமர் ஜான்சன்.
இருப்பினும் பிரித்தானியாவில் முழு முடக்கத்தை அமுலுக்கு கொண்டுவருவதற்கு முன்பு சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் முயற்சிப்பது தொடர்பில் பிரதமர் ஜான்சன் விளக்குவார் என்று கூறப்படுகிறது.
இதனிடயே, முழு முடக்கத்தை தொழிலாளர் கட்சி ஆதரித்தாலும், ஏன் இத்தனை தாமதம் என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.
வியாழக்கிழமை முதல் அமுலுக்கு வரவிருக்கும் முழு முடக்கம் தொடர்பில் கடந்த சனிக்கிழமை மக்களுக்கு அறிவித்த பிரதமர் ஜான்சன்,
இந்த முறை கடுமையான கட்டுப்பாடுகள் அமுலில் இருக்கும் என்ற எச்சரிக்கையையும் விடுத்துள்ளார்.
இப்போது நாம் உரிய நடவடிக்கை எடுக்க தவறினால், விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளபடி முதல் அலைகளுடன் ஒப்பிடும்போது குளிர்காலத்தில் கொரோனா இறப்புகள் இரு மடங்கு மோசமாகவோ அல்லது அதிகமாகவோ நிகழ வாய்ப்புள்ளதாக பிரதமர் ஜான்சன் கூறியுள்ளார்.