160 x 600 left

- Advertisement -

கொதிக்க வைத்த நீரில் எலுமிச்சைதோல் சேர்த்தால் கிடைக்கும் நன்மைகள்

0 412

முழு எலுமிச்சையையும் நீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரை அதிகாலையில் டீ, காபிக்கு பதிலாகப் பருகி வருவது நல்ல பலன்களை தரும். இந்த பானத்தை தினமும் காலை ஒரு டம்ளர் குடித்து வந்தால், நோய்யெதிர்ப்பு மண்டலம் வலிமையடைகிறது.

  • எலுமிச்சை கொதிக்கவைத்த நீர் நோய்களின் தாக்கத்தில் இருந்து நம்மை காக்கும். தினமும் இந்த நீரை காலை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் நீங்கள் மிகவும் ஆற்றலுடனும், சுறுசுறுப்பாகவும் இருக்கலாம்.
  • செரிமான பிரச்சனைகள் உள்ளவர்கள் இந்த பானத்தை தினமும் குடித்து வந்தால் செரிமான பிரச்சனைகள் சரியாகும் மற்றும் உடலில் உள்ள மெட்டபாலிசத்தை சீராக வைத்துக்கொள்ளும்.
  • சிட்ரிக் பழங்களிலிருந்து வரும் வலுவான நறுமணம் உடல் துர்நாற்றத்தைப் போக்கும், பாக்டீரியாவுக்கு எதிராகப் போராடும். எலுமிச்சைத் தோலின் சாறு, காயங்களைக் குணப்படுத்த உதவும். இது பாக்டீரியா பரவாமல் தடுக்கும்.
  • தினமும் காலையில் இந்த பானத்தை குடித்து வந்தால், உடலில் உள்ள மூலை முடுக்குகளில் உள்ள நச்சுக்கள் முழுமையாக வெளியேற்றப்டும். இந்த பானத்தை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உடலில் உள்ள கெட்டக்கொழுப்புகள் வெளியேற்றப்படுகிறது,
  • இந்த பானத்தை தினமும் குடித்து வந்தால் உடலை சுத்தபடுத்தும். முக்கியமாக உடலில் உள்ள PH அளவை நிலைப்படுத்தும்.

Leave A Reply

Your email address will not be published.