முகக் கவசம் அணியாமல் சென்றால் 14 நாட்கள் தனிமைப்படுத்தல்!
முகக் கவசம் அணியாமல் தம்புளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு நுழைந்தமை தொடர்பில் வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் தம்புளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு அருகில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரியின் ஆலோசனைகளை மீறி முகக் கவசம் அணியாமல் பொருளாதார மத்திய நிலையத்திற்குள் நுழைந்துள்ளார்.
இதனால் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டிற்கமைய அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பின்னர் இந்த வர்த்தகர் தம்புளை நீதவான் கோசல பண்டார இலங்சிங்கவுக்கு முன்னர் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
இதன்போது சந்தேக நபரை இரண்டு வாரங்கள் தனிமைப்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.