- Advertisement -

இலங்கையில் இன்றும் 227 பேருக்கு கொரோனா தொற்று!

0 127

ஸ்ரீலங்காவில் மேலும் 227 பேருக்கு கோவிட்-19 வைரஸ் தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெஃப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதன்படி, நாட்டில் கோவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 13,929ஆக அதிகரித்துள்ளது.

இன்று அடையாளம் காணப்பட்ட அனைவரும் ஏற்கனவே கோவிட்-19 வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்பை பேணியவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கோவிட்-19 வைரஸ் தொற்றுக்குள்ளாகி இதுவரையில் 8,285 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருவதோடு, 35 மரணங்களும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.