160 x 600 left

மே மாதம் பூமியை கடந்து செல்லவுள்ள கால்பந்து மைதான அளவிலான பெரிய பாறை

0 96

எதிர்வரும் மே மாதத்தில் மேலும் ஓர் பெரிய பாறை நம் கிரகத்தை கடந்து செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
“2021 AF8” என்ற பெயர் கொண்ட இந்த சிறுகோள் முதன் முறையாக மார்ச் மாதத்தில் விஞ்ஞானிகளினால் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது

ஒரு கால்பந்து மைதானத்தின் அளவை கொண்ட இந்த சிறுகோள் 260 முதல் 580 மீட்டர் வரை விட்டம் கொண்டது என விஞ்ஞானிகளினால் மதிப்பிடப்பட்டுள்ளனர்

இது தற்போது விநாடிக்கு ஒன்பது கிலோ மீற்றரையும் விட அதிக வேகத்தில் பூமியை நோக்கி நகர்வதுடன், மே 4 அன்று பூமியை கடந்து செல்லும். என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

அதிர்ஷ்டவசமாக அச் சமயத்தில் சிறுகோள் பூமியிலிந்து 3.4 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் பாதுகாப்பாக கடந்து செல்லும் என்றும் எதிர்வுகூறப்பட்டுள்ளது. எனவே மக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை.

எனினும் விஞ்ஞானிகள் இதன் நகர்வுகள் குறித்து கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றனர்.

இதேவேளை கடந்த 21 ஆம் திகதி 2001 FO32 என அழைக்கப்படும் விண்வெளி பாறையொன்றும் பூமியிலிருந்து 1.25 மில்லியன் மைல்கள் தூரத்தில் கடந்து சென்றமையும் குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.