160 x 600 left

மோசமான நிலையை நோக்கி நகரும் ஸ்ரீலங்கா – அதிகரிக்கும் கொரோனாவால் புதிய திரிபுகள்

0 258

கடந்த இரண்டு வாரங்களில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கையும், மரணங்களின் எண்ணிக்கையும் 50 வீதத்தால் உயர்வடைந்துள்ளதாகவும், இந்தியாவை விடவும் மோசமான நிலையொன்றை நோக்கி இலங்கை நகர்கின்றதாகவும் இலங்கை வைத்தியர்கள் சங்கத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பத்மா குணரத்ன தெரிவித்துள்ளார்.

இதேவேளை கொரோனா தொற்று வேகமாக பரவுவதன் காரணமாக புதிய திரிபுகள் உருவாகின்றதாக ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, எதிர்ப்புசக்தி ஆய்வு மற்றும் மரபணு விஞ்ஞானப் பிரிவின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

எனவே, இலங்கையில் பிரிட்டன் திரிபான பி.1.1.7 அல்பா திரிபு வேகமாக பரவுவதால் புதிய திரிபுகள் உருவாகுவதற்கும் வாய்ப்புகள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.