160 x 600 left

தனிமைப்படுத்தல் விதிகளை மீறியஇலங்கை வீரர்கள் 3 இடைநீக்கம்

0 78

குசல் மெண்டீஸ், தனுஷ்க குணதிலக்க மற்றும் நிரோஷன் திக்வெல்ல ஆகியோரை இலங்கை கிரிக்கெட் செயற்குழு இடைநீக்கம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக கூறப்படுகிறது.
இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் உயிர் குமிழியை மீறிய குற்றச்சாட்டுக்கு அமைவாக அவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் செயலாளர் மொஹான் டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் வீரர்களான நிரோஷன் திக்வெல்லா மற்றும் குசல் மெண்டீஸ் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை இரவு (27) டர்ஹாம் வீதிகளில் சுற்றித் திரிவதைக் காட்டும் காணொளி சமூக ஊடகங்களில் பரவியதை அடுத்து இந்த இடைநீக்கம் வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இவர்களுடன் தனுஷ்க குணதிலக்கவும் உடனிருந்தாகவும் கூறப்படுகிறது.

தற்போது நடைபெற்று வரும் கிரிக்கெட் போட்டியின் ஒரு பகுதியாக இலங்கை தேசிய அணி இங்கிலாந்தில் உயிர் குமிழியின் கீழ் உள்ளது, மேலும் நாளை (29) டர்ஹாமில் முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக விளையாடவுள்ளது.

இதேவ‍ேளை கிரிக்கெட் வீரர்கள் உயிர் குமிழி மற்றும் ஹேட்டல் ஊரடங்கு உத்தரவை மீறியுள்ளார்களா என்பதை அறிய இலங்கை கிரிக்கெட் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காணொளியின் நம்பகத்தன்மையை சரிபார்த்த பின்னர், வீரர்கள் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டால் அவர்கள் மீது கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும்.

Leave A Reply

Your email address will not be published.