160 x 600 left

வெட்டுக்காயங்களுடன் 14 வயது சிறுவன் சடலமாக மீட்பு!

0 114

வவுனியா லக்சபான வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றின் பின்பகுதியிலிருந்து இன்று காலை 8 மணியளவில் வெட்டுக்காயங்களுடன் 14 வயதுடைய சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

குறித்த சிறுவன் அவரின் வீட்டின் பின்பகுதியில் தலையில் அடிப்பட்ட காயத்துடனும், கழுத்தில் வெட்டுக்காயத்துடனும் சடலமாக காணப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

குறித்த விடயம் தொடர்பில் அயலவர்கள் காவல்துறையினருக்கு வழங்கிய தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா காவல்துறையினர் சிறுவனின் மரணம் தொடர்பிலான விசாரணைகனை முன்னெடுத்து வருகின்றனர்.
வவுனியா பண்டாரிக்குளம் விபுலானந்தா கல்லூரியில் தரம் 9இல் கல்வி பயிலும் 14 வயதுடைய உதயச்சந்திரன் சஜ்ஜிவன் என்ற சிறுவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சிறுவனின் மரணம் தொடர்பில் பலத்த சந்தேகங்கள் காணப்படுவதுடன் தடவியல் பொலிஸாரின் உதவியுடன் விசாரணைகள் முன்னெடுப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.